இந்த ஆண்டு (2016) இந்தியாவுக்கான ‘ஹஜ்’ கோட்டா 1,36,020 ஜித்தாவில் கையெழுத்தானது!

file-10-1457624933651391000இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்கும், சவுதி அரேபிய ஹஜ் அமைச்சர் முகம்மது ஹஜ்ஜாரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதில் ஹஜ் கமிட்டி மூலமாக 1 லட்சத்து 20 பேரும், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாக 36 ஆயிரம் பேரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ஹஜ் பயணிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

Close