தேர்தல்2016: அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ராஜேஷ் லக்கானி ஆலோசனை!

ec1சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதயொட்டி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன், தேர்தல் பணிகள், விழிப்புணர்வு குறித்து காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு சிறப்பு வசதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொழுநோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும், மருத்துவமனை அலுவலர்களே வாக்குச்சாவடியின் அலுவலர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் சமுதாயத்தின் பின்தங்கியவர்கள் பயமின்றி வாக்களிக்க தனி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும், அதிகளவில் பர்தா அணிந்த பெண்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளின், பெண் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Close