கழுத்தில் கத்தி வைத்து கேட்டாலும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூறமாட்டேன்: அசாதுதீன் ஓவைசி

பாரத மாதா குறித்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாரத மாதா குறித்த கருத்தில் எந்த சட்டத்தையும், விதியையும் மீறவில்லை என்று தெரிவித்தார். தன்னுடைய நாட்டுப் பற்று பாரத மாதா கருத்தில்தான் அடங்கியிருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
`இந்தியாவின் பெருமையை வளரும் தலைமுறையிடம் எடுத்துக் கூற ‘பாரத் மாதா கி ஜெய்’ என அனைவரும் கூற வேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருந்தார்.
கழுத்தில் கத்தியை வைத்து கேட்டாலும், அவ்வாறு தெரிவிக்க மாட்டேன் என்று, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

Close