Adirai pirai
posts

வாக்களிக்க பணம் பெற்றால் ஓராண்டு சிறை தண்டனை!

jbuvidcidhhsiசட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க பணம் பெற்றால் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள், ரெட்கிராஸ் சொசைட்டி ஆகியவை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் நேற்று தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது.கலெக்டர் சுப்பையன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் கூறும்ேபாது, சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற மே மாதம் 16ம்தேதி நடக்கிறது. வாக்காளர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க யாரிடமும் பணமோ, பொருளோ பெறக்கூடாது. ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறக்கூடாது. 100 சதவீத வாக்குப்பதிவு நடக்க வேண்டும். இதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகள், துண்டுபிரசுரங்கள் விநியோகம் ஆகியவை நடைபெற்று வருகிறது. பொறுப்புள்ள குடிமகன்களாக நடந்து கொள்ள வேண்டும். வாக்களிக்க பணம் பெற்றால் 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கலாம். 

ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்காளர்கள் தவறக்கூடாது என்றார். ஆர்டிஓ ஜெய்பீம், பயிற்சி கலெக்டர் தீபக்ஜேக்கப், தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜன், ரெட்கிராஸ் சேர்மன் ராஜமாணிக்கம், செயலாளர் நாசர், பொருளாளர் முத்துக்குமார், தஞ்சை தாசில்தார் தங்கபிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy