தூங்கும் அதிரை பேரூராட்சி! ஏங்கும் அதிரை மக்கள்! (புது ஆலடித்தெரு, வாய்க்கால் தெரு)

தற்போதைய காலங்களில் அதிரையில் சிம்பலாக மாறியுள்ளது குப்பைகள் எனலாம். அதிரையில் சுற்றிலும் மரங்களும் வீடுகளும் இருக்கின்றதோ இல்லையோ! தெருவெங்கும் குப்பைகள் இருக்கின்றன.

தற்பொழுது மழை வேறு தொடர்ந்து பெய்து வருகின்றது. ஊரெங்கும் குப்பைகள் கொட்டப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்தால் அள்ளப்படாததால் ஊரெங்கும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.

இது மழை காலமானதால் குப்பைகள் அங்கும் இங்கும் சிதரிக்கிடக்கின்றன. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

நாம் படத்தில் காண்பது அதிரை புது ஆலடித்தெரு மற்றும் வாய்க்கால் தெரு பகுதி. குப்பைகள் அள்ளாமல் அலெட்சியப் போக்குடன் செயல்பட்டு வரும் அதிரை பேரூராட்சியால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சியிடம் அதிரை பிறை சார்பாக  கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close