அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

  தேதி: 11/03/2016                                                

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 32 வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/03/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத் : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் ) 

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

சிறப்புரை : சகோ. A அபூபக்கர் ( பொருளாளர் )

அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை​​ : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

 தீர்மானங்கள்:

1) ABM-ரியாத் கிளையின் சார்பாக 20 நபர்களின் பென்ஷன் திட்டத்திற்காக வரும் மே, ஜூன், ஜூலைக்கான தொகையை முன் கூட்டி தலைமையகத்துக்கு அனுப்பி கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த பென்ஷன் தொகைக்காக உதவியவர்களுக்கு துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  

2) பைத்துல்மால் தலைமையகம் மாடியில் பெண்களுக்கான தையல் மிஷின் பயிற்சி மையம் தொடங்கியதற்கு ABM ரியாத் கிளையின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவிப்பதுடன் நமதூர் பெண்களும், மாணவிகளும் அதனுடைய பயிற்சியை பெற்று மிகவும் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . 

3) எதிர் வரும் ரமலான் மாதத்தில் வழக்கம்போல் இஃப்தார் நிகழ்ச்சியை பத்தாவிலுள்ள கிளாசிக் ஆடிடோரியத்தில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்காக உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான திட்டவரையறை அடுத்த கூட்டத்தில் முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது 

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 8-ம் தேதி APRIL 2016 வெள்ளிகிழமை 4.30 PM முதல் மஹ்ரிப் வரை ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டது . 

    
   
 

Close