வாகன ஓட்டிகளுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.  
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தைகளுக்கு நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதந்தோறும் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை இந்த முறை அதிரடியாக ரூ.3.09 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வரிசையாக 7 முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.

இதேபோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த மூன்று முறையாக உயர்த்தப்பட்டு வந்தது போல், இந்த முறையும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1. 90 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.

விலை உயர்வை தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் ரூ. 59.13 க்கும், டில்லியில் ரூ.59.68 க்கும் விற்பனை செய்யப்படும். அதேபோல் டீசல் சென்னையில் ரூ.49.09க்கும், டில்லியில், ரூ.48.33க்கும் விற்பனை செய்யப்படும்

கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1. 47 உயர்த்தப்பட்டது.

Close