துபை & ஷார்ஜாவில் CMN சலீம் அவர்களின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த சகோதரர்களே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மார்க்க கல்வியுடன் தரமான உலக கல்வி கற்று இஸ்லாமிய ஆளுமைகளை உருவாக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியும் ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமிய ஆரம்பப் பள்ளிகளை அமைக்க இஸ்லாமிய பெண் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நன்னோக்குடன் வளைகுடா நாடுகளிலும் தமிழகத்திலும் பல்வேறு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வரும் சகோதரர் CMN சலீம் அவர்களின் நிகழ்ச்சிகள் எதிர்வரும் 2016 மார்ச் 18 வெள்ளியன்று துபையிலும், மார்ச் 19 சனியன்று ஷார்ஜா மாநகரிலும் நடைபெறவுள்ளது.

இன்ஷா அல்லாஹ். கடந்த வாரம் வெள்ளியன்று அமீரகத் தலைநகர் அபுதாபியில் மக்களின் பேராதரவுடன் கருத்தரங்கு நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய ஏகன் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்தவர்களாக உழைப்போம், பிரார்த்திப்போம்.

Close