பாஜக எம்.எல்.ஏ தாக்கிய சக்திமான் குதிரையின் கால் வெட்டி அகற்றம்!

 
பாஜக எம்.எல்.ஏ. தடியால் அடித்ததால், எலும்பு முறிந்த போலீஸ் குதிரை சக்திமானின் பின்னங்காலின் கீழ் பகுதி அறுவை சிகிச்சை மூலம் வெட்டி அகற்றப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேரோடூனில், கடந்த 14ம் தேதி ஆளும் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, பாஜக எம்.எல்.ஏ ஜோஷி, காவல்துறையின் லத்தியை பிடுங்கி, ரோந்து குதிரையான சக்திமானின் பின்னங்காலை முறித்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில், பாஜக எம்.எல்.எ ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குதிரையை தாக்கியதாக பாஜகவைச் சேர்ந்த பிரமோத் போரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே குதிரையின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டத்திலிருந்து ரத்த ஓட்டம் தடைபட்டதால், குதிரைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் முடிவில் வேறுவழியின்றி குதிரையின் பின்னங்காலை, கால்நடை மருத்துவர்கள் வெட்டி அகற்றினர். அதற்கு பதிலாக செயற்கைக்கால் பொருத்தியுள்ளனர்.

பின்னர், கிரேன் உதவியுடன் குதிரையை நிற்க வைத்து அதற்கு உணவு வழங்கப்பட்டது.

Close