அதிரையில் அதிகளவில் கிடைக்கும் தேசப்பொடி மீன்கள்!

அதிரை கடற்பகுதியில் வெள்ளி
மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. நமதூர் காந்தி துறைமுக பகுதியில் மீனவர்கள் பைபர்
படகில் மீனவர்கள் தேசப்பொடி வலைகளை பயன்படுத்தி தேசப்பொடி(வெள்ளி மீன்கள்) பிடிக்கின்றனர்.
இப்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் அதிரை பகுதியில்
பிடிபடும் தேசப்பொடி மீன்கள் கிலோ 250 ரூபாய்க்கு விலைபோகிறது. இந்த மீன்கள் அதிரை
மக்கள் விரும்பி வாங்கி செல்வதால் மார்க்கெட்டில் மீன் சில்லரை வியாபாரிகள் கூறு போட்டு
விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து மீன் வியாபாரி
சாவன்னா கூறுகையில் இந்த தேசப்பொடி மீன்களுக்கு பல பெயர்கள் உள்ளன. வெள்ளி மீன்கள்,
வெள்ளி மீன்கள், வெள்ளைப்பொடி, மட்லீஸ் என பல வகை பெயர்கள் உள்ளன. இப்போது இந்த வகை
மீன்கள் அதிகளவில் பிடிபடுகிறது. இம்மீன்களை எங்களிடம் கிலோ 250 ரூபாய்க்கு வாங்கி
350 ரூபாய்க்கு வெளியிடங்களில் விற்பனை செய்கின்றனர்.

இப்போது மீன்பிடி தடைக் காலம்
என்பதால் மீன்களின் வரத்து மிகவும் குறைந்துள்ள நிலையில் தேசப்பொடி மீன்களின் வரத்து
படகிற்கு 10 வரை கிடைக்கின்றது என்றார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close