வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை அறிய இலவச தொலைபேசி மற்றும் SMS சேவை அறிமுகம்!

வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் நம் பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்க்காக இலவச தொலைபேசி சேவையையும் எஸ்.எம்.எஸ் சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 1950 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது தெரிவிக்கப்படும்.

அதுபோல் EPIC <SPACE> VOTER ID NUMBER (வாக்காளர் அட்டை எண்) டைப்ஸ் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு SMS செய்வதன் மூலமும் உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா! என்பதை அறிந்து கொள்ளலாம்.

Advertisement

Close