10ம் 12ம் வாழ்வின் துவக்கமும் முடிவும் அல்ல!!!

 fail-examபத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த இரண்டு தேர்வுகளை எழுதுவதற்க்கு முன்னர் மாணவர்கள் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் “இது உன் வாழ்வின் திருப்புமுணை, நீ கட்டாயம் நல்ல மதிப்பெண்களை பெற்றே ஆக வேண்டும்”என்கின்று கூறுவது உண்டு. இதனை கேட்கும் மாணவர்கள் பெரும்பாலானோரின் மனதில் இதில் தோல்வியடைந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

பதின்ம பருவத்தில் உள்ள மாணவர்களை இதனை மிகமுக்கியமாக கருத்தில் கொண்டு அதிக சிரம் எடுத்து முக்கியமான கேள்வி பதில்களை படித்துவிட்டு தேர்வு எழுத சென்றால், அங்கு அவர்கள் எதிர்பார்க்கும் அந்த கேள்வி வருவதில்லை. இதனால் சிலர் தாங்கள் தோல்வியடைந்து விடுவோமோ என்னும் அச்சத்திலேயே தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த பணிரெண்டாம் வகுப்புக்கான வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததால் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நான் தற்பொழுது பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகின்றேன். என்னை பொறுத்தவரை நீங்கள் பத்தாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் பணிரெண்டாம் வகுப்பில் உங்கள் பாட பிரிவை தேர்வு செய்வதற்க்கு பயண்படுத்தப்படுகின்றது. அதுவும் இப்பொழுது சராசரி மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கும் எளிதாக கிட்டுகின்றது. பணிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் நல்ல கல்லூரியையும் துறையையும் தேர்வு செய்வதற்க்கு மட்டுமே பயன்படுகின்றது. மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அதிக மதிப்பெண்கள் தேவைப்படுகின்றது. பொறியியல் படிப்பை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற காலம் வந்துவிட்டது. அந்த அளவுக்கு பல கல்லூரிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது.

என்னால் பத்தாம் வகுப்பில் 61 சதவீத மதிப்பெண்கள் தான் பெறமுடிந்தது. ஆனால் பனிரெண்டாம் வகுப்பில் 82 சதவீத மதிப்பெண்களை பெற்றேன். பொறியியல் சேர்ந்தேன். அதன் பின்னர் தான் என்னால் உணர முடிந்தது, நமது மதிப்பெண்கள் பொறியயல் கலந்தாய்வுக்கு பிறகு வேறு எங்கும் உதவாது என்று. பணிரெண்டாம் வகுப்பில் என்னை விட மிகக்குறைவான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் என்னை விட இங்கு அதிக மதிப்பெண்களை பெறுகின்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவன் 25 அரியர்களுன் திரிகின்றான்.

எனவே இந்த மதிப்பெண்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மாணிக்காது. குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் என்ன அந்த மதிப்பெண்களை வைத்து கலை&அறிவியல் பிரிவுகளில் நல்ல பிரிவை தேர்வு செய்து அதில் திரம்பட படித்தால் உங்கள் வாழ்வு வளம்பெறும். ஆனால் அதை விட்டு விட்டு இது தான் நம் வாழ்க்கை இதில் தோல்வியடைந்தால் நம் வாழ்க்கைப்முடிந்து விட்டது. அப்பா அம்மா திட்டுவார்கள், ஊர் உலகம். கேவலமாக பேசும் என்று எண்ணி இந்த முட்டாள்தனமான காரியங்களுக்கெல்லாம் உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

பொறியியல் மாணவர்

Close