காளைமாடுகளை விற்க்க சென்ற முஸ்லீம் இளைஞர்கள் கொலை..! கொடூரத்தின் உச்சம்…

  ஜார்கண்டில் லடேஹர் மாவட்டத்தில் உள்ள பளுமத் காட்டுப்பகுதியில் மாடு வியாபாரம் செய்து வந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி தூக்கிலிட்டு கொலை செய்துள்ளனர்.

அவர்கள் மேய்த்து வந்த எருமை மாடுகளையும் விரட்டியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இது இந்துத்தவ அமைப்பை சேர்ந்தவர்களின் செயல் தான் என்று கூறியுள்ளனர்

காவல்துறை தகவலின்படி கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் முஹம்மத் மஜ்லூம் மற்றும் அசாத் கான் ஆவார்கள். இந்த இருவரின் கைகளும் பின்புறம் கட்டப்பட்டு அவர்கள் வாயில் துணி வைத்து அடைத்து தூக்கில் இட்டுள்ளனர். அவர்கள் தூக்கிலடப்பட்ட நிலையை பார்க்கும் பொழுது கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிகிறது என்று கூறியுள்ளனர். கொலை செய்தவர்கள் கடுமையான வெறுப்பினால் உந்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Close