உறுதியானது திமுக – SDPI கூட்டணி!

maxresdefaultவருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி, திமுகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பின்னர் தொடங்கும் என தெரிவித்தார்.
முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி, மனித நேய மக்கள் கட்சியைத் தொடர்ந்து தற்போது எஸ்டிபிஐ கட்சியும் இணைந்துள்ளது.
Close