பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதில் புதிய விதிமுறை: ஏப்ரல்1 முதல் அமல்!

1458389227-2285பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யும் நபரிடமிருந்து முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யும் போத, குடும்ப அட்டை முகவரிக்கான ஆவணமாக ஏற்றக்கொள்ளப்பட்டது. தற்போது, அந்த இணையதளத்தில் முகவரிக்கான சான்று ஆவணத்தில் இருந்து, குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த ஆணையை வெளியுறவு அமைச்சகம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அணைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் அமலுக்கு வரும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Close