தாமரை சின்னத்தில் போட்டியிட தயார்! அஇமுமுக தலைவர் சதகத்துல்லா!

1458449550-7803


வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள முஸ்லிம் முன்னேற்ற கழகம் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அதன் தலைவர் சதக்கத்துல்லா கூறியுள்ளார்.

அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் சதக்கத்துல்லா, மத்திய அமைச்சர் பொ.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலில் தங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
பாரதீய ஜனதா கட்சியை இந்து மதவாத கட்சி என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவதை குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு, அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் பாஜக உடன் கூட்டணி வைத்தவர்கள் தான். தற்போது எதிரணியில் இருந்து கொண்டு மதவாத கட்சி என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
பஜக-வின் கூட்டணியில் இணைந்துள்ள நீங்கள் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் வளரும் இயக்கம். எங்களுக்கென்று தனி சின்னம் கேட்போம், அதே நேரத்தில் எங்கள் கூட்டணியின் தலைமை பாஜக என்பதால் அவர்கள் சொல்லும் சின்னத்தில் (தாமரை) மறுக்காமல் போட்டியிடுவோம் என்றார்.
Close