பணம் அனுப்பும் போது எச்சரிக்கை ! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை!

downloadபணம் அனுப்பும் போது எச்சரிக்கை ! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பண பரிவர்த்தனை செய்வது தொடர்பாக ஏதேனும் ஏமாற்று அழைப்புகள் வந்தால், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் செய்யுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த புகார் தொடர்பான தகவலை eam@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் வெளியுறவு அமைச்சகத்திற்கும் தெரியப்படத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குஷால் என்பவர் தனக்கு வந்த ஏமாற்று அழைப்புகள் குறித்து அமைச்சர் சுஷ்மாவிற்கு டிவிட்டரில் தெரிவித்திருந்தார். அழைப்பவர்கள், தங்களுடைய சொந்த தகவல்களை அறிந்து வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சுஷ்மா, இது போன்ற அழைப்புகள் வந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும், அதனை வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்தில் உள்ள உறவினர்களுக்கு பண அனுப்புவதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை பயன்படுத்துகின்றனர். 

இதனை பயன்படுத்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களை போலியான பெயரில் அழைத்து, அவர்களின் வங்கி விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்

Close