பட்டுக்கோட்டை, பேராவூரணியில் 24 மணி நேர வாகனச் சோதனை!

7b0edcbf-63d0-432b-a255-f18a210efefcபட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும்படை அதிகாரிகள் 24 மணி நேர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மாணிக்கவல்லி தலைமையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை சாந்தி தலைமையிலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சிவகுமார் தலைமையிலும் தலா ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், 2 தலைமைக் காவலர்கள் கொண்ட பறக்கும் படையினர் இரவு பகலாக 24 மணி நேர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் அரசுமணி, பூவந்திநாதன், கோபி ஆகியோர் தலைமையில் 3 பிரிவாக 24 மணி நேர வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Close