பாக். கிரிகெட்டிற்க்கு ஆதரவு : மாணவர்கள் கைது!

கொல்கத்தாவில் கடந்த 19-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை டி20 போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டதாக 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு அருகில் உள்ள புட்டூர் என்ற நகரத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டதாகப் புகார் எழுந்தது.

image

இதையடுத்து அந்த மாணவர்களைக் கடந்த புதன்கிழமை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். நன்னடத்தை சான்றிதழ் சமர்பித்த பின்னர் கைது செய்யப்பட்ட தினத்தன்றே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

– source: puthiyathalaimirai

Close