சென்னை புதுக்கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்! (படங்கள் இணைப்பு)

  சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியான நியூ காலெட்ஜ் என்று அழைக்கப்படும் புதுக் கல்லூரி. இக்கல்லூரியில் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதிரையை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு இளநிலை, முதுகலை படிப்புகளை படித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2012-2015 ஆம் கல்வியாண்டில் இளநிலை B.Sc (COMPUTER SCIENCE) பிரிவில் படித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அதிரை மாணவர்கள் உட்பட பலர் கல்வி பட்டம் பெற்றனர். இவர்களின் எதிர்காலம் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.  

     
    
 

Close