துபாயில் ஆபத்து காலங்களில் உதவும் அதிவேக நவீன ஆம்புலன்ஸ் கார் அறிமுகம் !

 துபாயில்  விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் உதவும் ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது கூடுதலாக‌ அதிவேக ‘லோட்டஸ்’ கார் இணைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்றவாறு இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபத்து காலங்களில் உயிர்களை குறைந்த நிமிடங்களில் காப்பற்றுவதற்கான முயற்சியில்  செயல்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உலகில் மிக பெரிய கண்காட்சிகளில் ஒன்றான ஜிடெக்ஸ் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதுமிருந்து பல்வேறு முன்னணி  நிறுவனங்கள் தங்கள‌து புதிய நவீன தயாரிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளனர். 

ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் உதவும் துபாய் ஆம்புலண்ஸ் சேவை (Dubai Corporation for Ambulance Services (DCAS). (டிசிஏஸ்) சார்பாக  ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது கூடுதலா அதிவேக லோட்டஸ் கார்  ஜிடெக்ஸ் கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Close