வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் அவரவர் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களே முதலிடம் !

அவரவர் சூழ்நிலை காரணமாக லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள், இந்நிலையில் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களில் தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், இந்தியர்களே முதலிடத்தை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து சொந்த நாட்டிற்கு பணம் உலகின் பல்வேறு நாடுகளின் மக்களை பின் தள்ளிய இந்திய மக்கள் அதிகளவில் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகின்றனர் என உலக வங்கி நிறுவனத்தின் தலைமை துணைத் தலைவர் மற்றும் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, வெளிநாடுகளிலிருக்கும் அவரவர் நாட்டு மக்களால் நாடுகளுக்கு கிடைக்கும் வருமானம் டாலர்களில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா – 7,100 கோடி, சீனா – 6,400, பிலிப்பைன்ஸ் – 2,800, மெக்சிகோ – 2,400, நைஜீரியா – 2,100, எகிப்து – 1,800, பாகிஸ்தான் – 1,700, வங்கதேசம் – 1,500, வியட்நாம் – 1,100, உக்ரைன் – 900. இந்த வருமானம் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், இத்தகைய வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Close