அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா (படங்கள் இணைப்பு)

  
அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் 67வது ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மதியம் 2:30 மணியளவில் பள்ளி வளாகத்தில் துவங்கி நடைபெற்றது.  

இவ்விழாவிற்க்கு காதிர் முஹைதீன் கல்லூரி முதல்வர் முனைவர்.ஜலால் அவர்கள் வாழ்த்துரை மற்றும் மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கவிஞர்.சொல் அருவி பட்டுக்கோட்டை ராஜப்பா அவர்கள் கலந்துக்கொண்டு இனிய தமிழில் நகைச்சுவை பொங்க அருமையாக சிறப்புரையாற்றினார். 

இதற்க்கு முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜனாப்.மஹ்பூப் அலி அவர்கள் வரவேற்ப்புறை நிகழ்த்தி பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் பள்ளியில் சென்ற ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. மேலும் விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

இப்பள்ளியில் இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், அணைத்து ஆசிரியர்களுக்கும் நிணைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.  

    
   
  
    
    
    
    
    
    
    
    
    
 

Close