தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் தேர்தல் பணிக்குழு அமைப்பு!

  
எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பு !தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் அபுல் ஹசன், மாவட்ட பொருளாளர் ஷேக் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு முடிவில் தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு அபுல் ஹசன் அவர்களும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு செய்யது முஹம்மது அவர்களும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு அப்துல் ரஹ்மான் அவர்களும், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு ஷேக் ஜலாலுதீன் அவர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் தலைமையின் கீழ் தலா 5 பேர் வீதம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அசாருதீன் நன்றி கூறினார். கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Close