எந்தகட்சிக்கும் ஆதரவு கிடையாது! TNTJ பொதுக்குழு கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவிப்பு!

  நேற்றைய தினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோடு ப்ளாட்டினம் மஹாலில் நடைபெற்றது. இதில் TNTJ மாநில தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்துக்கொண்டு தலைமை தாங்கினார். இந்தக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கிளை தலைவர்கள் தொண்டர்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். 

இதில் பல முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன. மேலும் பலதரப்பட்டவர்கள் தேர்தல் குறித்த TNTJ வின் நிலைபட்டினை அறிவிக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பொதுக்குழுவில் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்பதை TNTJ தலைமை திட்டவட்டமாக அறிவித்து விட்டது. 

மேலும் இந்த பொதுக்குழுவில் பல பிரிவுகளில் சிறப்பாக சேவை செய்த கிளை நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.  

இந்த கூட்டத்தில் அதிரை கிளை 1 மற்றும் கிளை 2 ஐ சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். 

    
    
    
    
 
   

Close