Adirai pirai
posts

5000 கார்கள் 8000 ஊழியர்கள் ! அமீரகத்தில் (UAE) கார் தொழிலில் முன்னணியில் தமிழர் !யுஏஇ என்றழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் அரேபியன் ஹோல்டிங் நிறுவனத்தின் அரேபியன் டாக்சி பிரிவு இந்நிறுவனத்திற்கு சொந்தமான 5000த்திற்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு அமீரகத்தில் அதிக வாடகை கார்களை கொண்டுள்ள நிறுவனமாக முன்னிலை வகிக்கிறது.

இதன் நிறுவனர்களில் ஒருவரும் துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநருமாக திகழ்பவர் பிஎஸ்எம் ஹபீபுல்லாஹ் இவர் வறட்சி மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரையை சேர்ந்தவர்.இந்நிறுவனத்தில் தென் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இறைவனின் அருளால் எங்களது நிறுவனத்தின் வளர்ச்சியின் முன்னோடியாக ஆரம்ப காலத்திலிருந்து என்னுடையை வளர்ச்சியில் கவனம் செலுத்திய என்னுடையை உறவினர் தொழில் துறை ஜாம்பவான் மரியாதைக்குறிய பிஎஸ் அப்துல் ரஹ்மான் அவர்களையே சேரும்.

ஏனென்றால் எனது கல்லூரி படிப்பை தொடரும் முன்பே அவர்கள் என்னிடம் ஆட்டொமொபைல் இன் ஜினியரிங்க் படிக்க சொல்லியிருந்தார்கள் பின்னர் கால ஓட்டத்தில் நான் சென்னை புது கல்லூரியில் பி காம் படிப்பில் சேர்ந்தேன் பின்னர் எனது கல்லூரி முடித்தவுடன் 1970ல் பிஎஸ் ஏ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களுடைய சென்னை கட்டுமான நிறுவனத்தில் பொருள்களை கொள்முதல் செய்யும் துறையில் பணியாற்றினேன். பிறகு அங்கிருந்து திருச்சியில் உள்ள அவர்களின் நிறுவனத்தின் மீடியா துறையில் பணியாற்றினேன் .பின்னர் சிங்கப்பூர்,மலேசியா, ஹாங்காங்க்,இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஸ்டீல்,டிம்பர்,கார்மென்ட்ஸ்,டிரேடிங் என பல்வேறு துறைகளில் பல ஆண்டுகள் பெரியவர் அவர்களின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 1978ல் என்னை துபாய் செல்லுமாறு பிஎஸ் ஏ அவர்கள் பணித்தார். அப்போது நான் இந்தோனேசியாவில் கார்மென்ட்ஸ் தொழிற்சாலையில் இணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தேன்.

உடனடியாக அவர்களுடைய உத்தரவை ஏற்று துபாய் வந்தேன் என்னை மிகவும் ஆச்சரிய பட வைத்த விசயம் என்னவென்றால் பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்து கொண்டிருந்த என்னை ஆட்டோ மொபைல் படிக்க சொன்னார். எதை படிக்க சொன்னார்களோ அதனை மிகுந்த ஞாபகம் வைத்து அது தொடர்பான தொழிலை கவனிக்க என்னை துபாய்க்கு வர வைத்துள்ளார்கள். ஏனென்றால் அப்போது இடிஏ கார்ஸ் ஒர்க்சாப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது பாலைவனமாக இருந்த அந்த பகுதியில் வளைகுடாவிலேயே மிக பெரிய கார் ரிப்பேரிங் சென்டருக்கான கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. துபாயில் எக்சிகியுடிவாக பணியாற்றி வந்த நான் ஜாயின் மேனேஜிங் டைரக்டராக பதவி உயர்த்தப்பட்டேன். பின்னர் சில ஆண்டுகள் கழித்து யுஏஇல் முதல் முறையாக இடிஏ கார்ஸ் நிறுவனத்தில் 750 கார்களுடன் வாடகை கார் பிரிவை தொட ங்கினேன்.அது ஒரு புது முயற்சி அது வரை யாரும் இப்பகுதியில் தொடங்கவில்லை மிகவும் வெற்றிகரமாக அத்தொழில் செயல்பட்டது. படிபடியாக அதே நிறுவனத்தில் கார் டிரேடிங்கை தொடங்கினோம் அப்படியே படி படியாக பல்கி பெரும் இன்று கார்ஸ் பெரும் நிறுவனமான உள்ளது. இப்போது நான் அங்கு இல்லையென்றாலும் என்னுடைய இத்தொழிலுக்கான் அனுபவங்கள் அங்கிருந்து பெற்றவைதான்.அந்நிறுவனத்தின் பங்குதாரரில் நானும் ஒருவன்.

இப்போது அரேபியன் ஹோல்டிங் என்ற எங்களது நிறுவனத்தில் அரேபியா டாக்சி என்ற பெயரில் வாடகை கார்களை இயக்கி வருகிறோம்.இந்த அரேபியா ஹோல்டிங்க் நிறுவனத்தில் 5000த்திற்கும் மேற்பட்ட கார்கள் உள்ளனர்,8000ம்ம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இங்கு பணியாற்றும் ஓவ்வொருவரும் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர் போன்று உழைத்து இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக செலுத்துகிறார்கள். வேலை வாய்ப்பில் அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு பணியாற்றுகிறார்கள்.வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

இது தவிர சமூக சேவையின் அடிப்படையில் ஈமான் அமைப்பின் மூலம் கல்வி உதவிகளை செய்து வருவதோடு கீழக்கரையில் சுகாதாரத்தை பேணுவதில் முக்கிய பங்காற்றி வரும் கீழக்கரைவெல்பேர் உருவாக்குவதில் நான் மிகவும் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றினேன்

அதில் நான்கு “கான்”களுக்கு முக்கிய இடமுண்டு என்று சொல்வார்கள் அதில் தற்போதைய வடக்குதெரு ஜமாத் தலைவர் அக்பர்கான், இடிஏ கணக்கு பிரிவு பொது மேலாளர் ஹமீது கான் மற்றொருவர் மறைந்த லியாக்கத் அலிகார் என்னுடைய பெயரிலும் கான் உண்டு இப்படி கீழக்கரை நாம் என்ன செய்தோம் என்றவர்களின் சிந்தனையில் உதித்ததுதான் கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட்.

இறைவன் அருளோடு உழைப்பும் ,பணிவும் ,தைரியமும்,உண்மையும் இருந்தால் நிச்சயம் வாழ்வில் உயர முடியும் என்பதே நான் கண்ட பாடமாகும் நஷ்டங்களை சந்தித்த போது ஒரு போதும் தளர்ந்ததில்லை.பாசிடிவாக சிந்திக்க வேண்டும் எனற கொள்கையை பின்பற்றி வருகிறேன் இது பெரியவர்கள் பிஎஸ் ஏ அவர்களின் பாதையில் வந்ததால் எனக்கு கிடைத்த படிப்பினை என்றார்.


மேலும் இவர் துபாயில் ஹாராஜா ,அரேபியன் ஹட்,புரூட் பன்ச்,காலிகட் நோட்புக்,அன்னபூர்னா உள்ளிட்ட பல்வேறு உணவகங்களையும், பிரைட் இண்டர் நேசனல்,எமிரேட்ஸ் ஸ்டார் மோட்டார்ஸ், மொபிசாட் ஐடி சொல்யூசனஸ் உள்ளிட்ட இன்னும் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதே போன்று இந்திய பென்ஸ் டீலரான டிரான்ஸ் கார்,கார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குதாரராக திகழ்கிறார்.Advertisement