திருச்சியில் PFI நடத்திய மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற முழக்கத்துடன் ஆரோக்கியத்தை வலியுறுத்தி தேசிய அளவிலான பிரசாரத்தை oct 15-30 வரை நடத்தப்பட இருக்கின்றது .

தமிழகத்தின் அதன் துவக்க நிகழ்சியாக திருச்சி மாவட்டத்தில் மராத்தான் ஓட்டம் 12.10.2014 அன்று காலை 07:30 மணி அளவில் திருச்சி ஒத்தகடை (முத்திரையர் சிலை) -ல் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை சுமார் 5 கி.மீ. தூரம் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது . 

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளரும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவருமான I சபியுல்லா தலைமையேற்றார் .

இந்த மினி மராத்தான் நிகழ்ச்சியினை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் வழக்கறிஞர் N.M ஷாஜஹான் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்..

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் DR T.மகாமுனி தலைமை மருத்துவர் தலைமையில் அவர்களது குழுவினர் யோகா செய்முறை பயிற்சியை நிகழ்த்தினர் மற்றும் CHOTTAHAN KARATE , N நஜுமுதீன்,5th Dan Black Belt அவர்களது தலைமையில் அவரது குழுவினர் தற்காப்பு பயிற்சியை நடத்தி காட்டினர் .இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலில் வரும் மூன்று நபர்களுக்கு முறையே ரூபாய் 7000 ,5000,3000 மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பாக தடகள சங்க தொழிநுட்ப ஒருங்கிணைப்பாளர் N அண்ணாவி அவர்களால் வழங்கப்பட்டது. 

இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A முஹம்மது சித்திக் நன்றியுரை ஆற்றினார்.

Advertisement
Close