Adirai pirai
POLITICS posts தமிழகம்

SDPI க்கு 1 தொகுதி தான் கொடுக்க முடியுமாம் : திமுக

img_5034-1ஒரேயொரு தொகுதி மட்டுமே தரமுடியும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறி யதால் எஸ்டிபிஐ கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், மமகவுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 25-ம் தேதி காங்கிரஸுடன் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப் படவில்லை.

இந்நிலையில் அண்ணா அறிவா லயத்தில் நேற்று எஸ்டிபிஐ கட்சி யுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடந்தது. எஸ்டிபிஐ மாநி லத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் பேச்சு நடத்தினர். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

முஸ்லிம் லீக், மமகவுக்கு ஒதுக் கப்பட்டதுபோல தங்களுக்கும் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தெகலான் பாகவி வலியுறுத்தி யுள்ளார். அதை ஏற்காத ஸ்டாலின், ஒரு தொகுதி மட்டுமே தரமுடியும் என உறுதியாக கூறியுள்ளார். இதனால் கட்சியினருடன் ஆலோசித்துவிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கடந்த 2011 தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு பாளையங்கோட்டையில் 7 ஆயிரம், கடையநல்லூரில் 6,800 மற்ற தொகுதிகளில் 2,500 முதல் 3 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றோம். 2014 மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு தலா 15 ஆயிரம் வாக்குகளைப் பெற் றோம். எனவே, எங்களுக்கு 5 தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டோம். ஆனால், ஒன்று மட்டுமே தரமுடியும் என திமுக கூறுகிறது. இதனால் எந்த முடிவும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஆனாலும் விரைவில் சுமுக முடிவு ஏற்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
குறைந்தது 3 தொகுதிகள் வந் தால் கூட்டணியில் இருப்பது அல்லது தனித்துப் போட்டி என்ற முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy