Adirai pirai
தமிழகம்

நடந்து சென்ற 2 பெண்களிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு!

chain-robberyபட்டுக்கோட்டையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் 13 பவுன் தாலி சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர்விழி (47). அதே பகுதியைச் சேர்ந்தவர் மரியபிரான்சிஸ் மனைவி சாந்தா (57). மாற்றுத் திறனாளியான இவர் மதுக்கூர் அருகே வாட்டாகுடி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியை.

திங்கள்கிழமை இரவு ஏழரை மணிக்கு ஆட்டோவை அழைத்து வர மலர்விழியும், மருந்து வாங்க சாந்தாவும் தங்கள் வீட்டிலிருந்து இணைப்புச் சாலை வழியாக அருகிலுள்ள அதிராம்பட்டினம் பிரதான சாலைக்கு தனித்தனியே நடந்து சென்றனர். இருவருக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முதலில் மலர்விழி கழுத்திலிருந்த 8 பவுன் தாலி சங்கிலியையும், அடுத்து சாந்தா கழுத்திலிருந்த 5 பவுன் தாலி சங்கிலியையும் பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து மலர்விழி, சாந்தா ஆகியோர் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து வந்து பட்டுக்கோட்டை நகரில் முகாமிட்டு நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy