அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மேன்மை குறித்து CMN சலீம்!

  அதிராம்பட்டினம் தந்த 

மற்றும் ஆளுமை************************

இஸ்லாத்தின் எழுச்சிக்கும்  

முஸ்லிம் உம்மத்தின் மேன்மைக்கும்

உயிருள்ளவரை ஓய்வில்லாமல் 

உழைக்கும் உயர்ந்த மக்களாக 

ஒரு சிலரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 

பூமியின் ஒவ்வொரு பகுதியிலும்

ஒவ்வொரு காலத்திற்கும்

தேர்வு செய்கிறான்
இலங்கையின் கிழக்குப் பகுதி

காத்தான்குடியில் அமைந்துள்ள 

ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபு கலாசாலையின்

முதல்வராக……நூற்றுக்கணக்கான ஹாபிழ்கள் 

மற்றும் ஆலிம்களை உருவாக்கிய ஏகத்துவ

சேவையாளர் ஊரையும் உறவுகளையும் பிரிந்து 

ஏறக்குறைய 60 ஆண்டுகளாக

காத்தான்குடி மக்களின் ஆன்மீக 

எழுச்சிக்கும்…….
மிக நெருக்கடியான காலத்தில் 

ஊரின் அமைதிக்கும்……. முதிர்ந்த 

அறிவோடு உழைத்த மூத்த ஆளுமை

    

 ” பெரிய ஆலிம்ஸா ” என்று மக்களால் 

சங்கையோடு அழைக்கப்படும் 

அப்துல்லாஹ் ரஹ்மானி ஹஸ்ரத் அவர்கள்

பிறந்த ஊர் அதிராம்பட்டினம் 
 ஹஸ்ரத் அவர்களைப் போன்ற ஆளுமைகளை

உருவாக்கும் பாரம்பர்யத்தை தக்க வைக்க……. 

அதிராம்பட்டினத்தில் உள்ள அரபு மதரஸாக்களை 

நவீன காலத்திற்கேற்ப தரம் உயர்த்த வேண்டும் 

இவ்வாறு சகோதரர் CMN சலீம் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் கூறியுள்ளார். 

    
 

Close