வாட்ஸ்-அப் மூலம் லேண்ட் லைனுக்கு பேச வசதி விரைவில் அறிமுகம்!

hqdefaultவாட்ஸ்-அப்பில் இருந்து மற்றொரு வாட்ஸ் அப் பயன்பாட்டாளருக்கு இணைய பேக்கேஜ் மூலம் போன் அழைப்பு மேற்கொள்ளும் வசதி உள்ளது. இதுபோல் வாட்ஸ் அப்பில் இருந்து உள்நாட்டுக்குள் பிற போன் எண்களுக்கு, குறிப்பாக லேண்ட் லைன்களுக்கும் அழைப்பு மேற்கொள்ள இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இணைய நெட்வொர்க்கில் இருந்து இணைய இணைப்பு அல்லாதவற்றுக்கு (லேண்ட் லைன்) தொடர்பு கொள்ள வழிவகுக்கும் என தொலைத்தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்புதல் கிடைத்த பிறகு பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

Close