Adirai pirai
POLITICS posts தமிழகம்

IJM மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் கைது!

  
இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மதுக்கூர் மைதீன் அவர்களை விசாரணை என்ற பெயரில் நேற்று (30-03-16) மாலை 3 மணி அளவில் அழைத்து சென்றனர், திருச்சி காவல்துறையினர்.
இந்நிலையில், மதுகூர் மைதீனின் நிலைமை இதுவரை தெரியவில்லை என்று IJM நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மேலும், இச்செயலை கண்டித்து நேற்று திருச்சி மாவட்டத்தில் இரவு 10:30 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலை நீடித்தால், இன்று காலை மதுரை, திண்டுக்கல்,பட்டுகோட்டை, அதிரை,நத்தம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் கூறினர்.