அதிரை கடற்கரைத் தெரு இளைஞர்களின் சமூக சேவைகள்! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத் தெரு மையவாடி கடந்த பல ஆண்டுகளாக கருவேலமரங்கள் மண்டி காடு போல் காட்சியளித்தது. இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த தன்னார்வம் கொண்ட இளைஞர்கள் சேர்ந்து மையவாடியில் உள்ள கருவேல மரங்களை வெட்டி மையவாடியை சுத்தம் செய்தனர். அதுபோல் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகே வாகனங்கள் வேகமாக சென்று வருவதால் அங்கு வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளைப் பெற்று எந்த வேலையும் செய்யாத பொறுப்பில்லாத ஆட்சியாளர்கள் மத்தியில் இந்த சமுக ஆர்வம் கொண்ட கடற்கரைத் தெரு இளைஞர்களின் இச்செயலை அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close