பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து !

பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் இருந்து அறந்தாங்கியில் உள்ள அழியாநிலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு 18 பேர் டூரிஸ்ட் வேனினை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் வேன் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவனம் கலாம் பாலிடெக்னிக் அருகே வளைவில் சென்று வேகமாக திரும்பியபோது வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவழிந்தது பல முறை உருண்டு சாலையில் கிடந்தது. இந்த விபத்தில் வேனில் பயனம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வேன் ஓட்டுனர் பிரபாகர் (42), கார்த்தி (26), ரமா (40) உள்பட அனைவருக்கும் பலத்த காயம், இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சிலரை பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி மருத்தவ மனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர். ஆவணம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

படம் மற்றும் செய்தி :I.M.ராஜா 

Advertisement

Close