Flash news: அதிரையில் சாலை விபத்து! ஒருவர் படுகாயம்! (படங்கள் இணைப்பு)

   
தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மகன் கணேசன் (35). இவர் இன்று இரவு அதிரை வல்லிக்கொள்ளை காடு பகுதி அருகே ஈசி ஆர் சாலையில் வந்துக்கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவர் அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளார். 

 

Close