உலக அளவில் அதிக சாலை விபத்து! சென்னைக்கு 2வது இடம்!

உலகிலேயே விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடம் பெற்றுள்ளது. உலகில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் விபத்தில் இறக்கின்றனர் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகம் விபத்து நடக்கும் இரண்டாவது நகராக சென்னை இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்கள் முறையே 23, 24வது இடத்தை பெற்றுள்ளன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சென்னை வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Close