அதிரை அருகே இராஜாமடம் அண்ணா பல்கலைகழத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!

அதிரை அருகே உள்ளே ராஜாமடம் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புல முதல்வர் இளங்கோவன் துவக்கி வைத்தார்.

ராஜாமடம், கீழத்தோட்டம் ஆகிய கிராம பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொண்டனர். பேரணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியில் பேராசிரியர்கள் செந்தில்நாதன், ராஜப்பா, தமிழரசன், ராஜேஸ், கார்த்திகேயன், கவிதா, ஊராட்சி தலைவர் அன்னக்கிளி, முருகன், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அனந்தநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Close