அதிரையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழு கூட்டம் (படங்கள் இணைப்பு)

  
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பி.எஸ் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் இணைந்து போட்டியிடக்கூடிய அனைத்து தோழமைகட்சிகளின் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்களாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பி.எஸ் அப்துல் ஹமீது, முஹம்மது பந்தர், ஹாஜி முகம்மது பாருக், தஞ்சை ரபீக்தீன், வல்லம் பஷீர் அஹமது ஆகியோரும், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பணிக்குகுழு பொறுப்பாளர்களாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன், விளார் பிரைமரி தலைவர் ஜி. பாஷா, எம். ஷேக் முகம்மது, சாதிக் பாட்ஷா ஆகியோரும், பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் ஏ. முனாஃப், மதுக்கூர் அப்துல் காதர், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், பட்டுகோட்டை நசுருதீன் ஆகியோரும். பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் செந்தலை நெய்னா முகம்மது, ஆவணம் அப்துல் ரஜாக், அப்துல் லத்திப், அப்துல் கரீம் , பேராவூரணி ராஜா முகம்மது ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கூட்ட முடிவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

    
 

Close