ஜித்தாவில் நேற்று 09.10.2014 வியாழக்கிழமை மாலை 06:00 மணியளவில் ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு ஹாஜிகளையும் அவர்களைச் சார்ந்தோர்களையும் ஒரு சேர சந்தித்து கலந்துரையாடப்பட்டது. நிகழ்ச்சியின் நிரலாக அதிரை உள்ளிட்ட தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட
ஏராளமான ஹாஜிகள் இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். ஊரிலிருந்து வருகை புரிந்த நெய்னா ஆலிம் அவர்கள் ஹஜ்ஜுக்குப் பின் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் வந்திருந்த ஹாஜிகளுடன் ஹஜ் நிகழ்வுகள் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆண்கள் , பெண்கள் என இரு பிரிவினருக்கும் சிறு மார்க்க வினாடி வினா போட்டி வைக்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை சகோ. ரஃபியா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஷரஃபியா ஃபிரண்ட்ஸ் அசோசியேசன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

தகவல்: ஜஃபருல்லாஹ்

Advertisement

' />

புனிதப் பயணம் வந்துள்ள ஹாஜிப் பெருந்தகைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ! ஜித்தாவில் நடைபெற்றது !
ஜித்தாவில் நேற்று 09.10.2014 வியாழக்கிழமை மாலை 06:00 மணியளவில் ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு ஹாஜிகளையும் அவர்களைச் சார்ந்தோர்களையும் ஒரு சேர சந்தித்து கலந்துரையாடப்பட்டது. நிகழ்ச்சியின் நிரலாக அதிரை உள்ளிட்ட தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட
ஏராளமான ஹாஜிகள் இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். ஊரிலிருந்து வருகை புரிந்த நெய்னா ஆலிம் அவர்கள் ஹஜ்ஜுக்குப் பின் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் வந்திருந்த ஹாஜிகளுடன் ஹஜ் நிகழ்வுகள் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆண்கள் , பெண்கள் என இரு பிரிவினருக்கும் சிறு மார்க்க வினாடி வினா போட்டி வைக்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை சகோ. ரஃபியா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஷரஃபியா ஃபிரண்ட்ஸ் அசோசியேசன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.தகவல்: ஜஃபருல்லாஹ்Advertisement

Close