தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்! SDPI கட்சி அதிரடி அறிவிப்பு!

 கடந்த சில மாதங்களுக்கு முன்னரே SDPI கட்சி தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதாக கூறப்பட்டு வந்தது. இதில் திமுக மற்றும் மமக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து SDPI உடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காத காரணத்தினால் SDPI க்கு தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி திமுக வுடன் நடைபெற்ற பேசுவார்த்தை திருப்திகரமாக இல்லாத காரணத்தினால் அக்கூட்டணியில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். 

தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். 

Close