மதுக்கூர் மைதீன் கைது! பரபரப்பு பின்னனி குறித்து IJM தஞ்சை மாவட்ட தலைவர்!

 சம்பவத்தன்று பட்டுக்கோட்டையில் அஜிஸ் என்ற சகோ காவல்துறை அழைத்து சென்று உள்ளது 
அழைத்து சென்ற காவல்துறை அஜிஸை காட்டு மீராண்டி தனமாக தாக்கி உள்ளனர் 

( குறிப்பு – அஜிஸின் தம்பி கூறுகையில் கிட்டத்தட்ட 4 மனி நேரம் அடித்து உள்ளனர் ) 
இதை அறிந்த அதிராம்பட்டினம் தாருத் தவ்ஹித் சகோதரர்.ஜமாலுதீன் அவர்கள் காவல் நிலைத்திற்கு விசாரிக்க சென்று உள்ளார் 
அந்த சகோதரரை காவல்துறையினர் கேவலமாக பேசி , அசிங்க படுத்தி அனுப்பி உள்ளனர் 
இந்த தகவலை இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருகினைப்பாளர் மதுக்கூர் மைதினிடம் அஜிஸின் தம்பி குறி உள்ளார் 
இதை அறிந்தவுடன் �, இதை போல் பல குற்றச்சாட்டு பட்டுக்கோட்டை காவல்துறை மேலும் குறிப்பாக SI மதன் குமார் மேலும் இதற்கு முன்பு வந்து உள்ளதால் , சகோதரர் மதுக்கூர் மைதின் காவல் நிலையத்திற்கு சென்று உள்ளார் 
( குறிப்பு – பட்டுக்கோட்டை காவல்துறை கண்டித்தும் , SI மதன் குமாரை கண்டித்து நான்கு மாதம் முன்பு அதிராம்பட்டினத்தில் போராட்டம் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பாக நடந்து உள்ளது ) 
காவல் நிலை சென்ற சகோதரர் மைதினிடம் சிறிது நேரம் பேசி விட்டு அங்கு இருந்த காவல்துறை , 

சகோதரர் மைதினிடம் ASP அர்விந் மேனன் அழைத்ததாக குறி உள்ளார் 
அழைப்பது Asp என்பதனால் , சகோதரர் மதுக்கூர் மைதின் Asp யை சந்திக்க சென்று உள்ளார் 
அங்கு சென்றவுடன் Asp யிடம் சகோதரர் மதுக்கூர் மைதின் சகோதரர் அஜிஸ் பற்றியும் மற்றும் அதிரை சகோதரர் பற்றியும் பேசி உள்ளார் 

இதை கேட்டு கொண்டு இருந்த Asp அர்விந் இது சம்மதமாக எந்த ஒரு பதிலையும் தராமல் 

நீங்கள் எல்லாம் காவல் நிலையத்திற்கு வர கூடாது , மீறி வந்தால் வருகின்ற எல்லோரும் மீது வழக்கு போடுவேன் என்று கூறி உள்ளார் 
ஏன் நாங்கள் வர கூடாது என்று கேள்வி கேட்டதற்கு எந்த பதிலும் Asp தர வில்லை 

ஆனால் பிரச்சனை வளக்கும் விதமாகவே Asp பேசி உள்ளார் 

உதாரணமாக – நீங்கள் எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான் தேர்தல் முடியட்டும் என்று குறி உள்ளார்
அப்போது மைதின் ஏன் தேர்தல் இப்பவே சொல்லுங்கள் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு 

நீங்கள் எல்லாம் ஒரு ஆளு திமுகாவுக்கு ஆதரவு கொடுக்கிறிங்க , ஏ அதிமுக கொடுக்க மாட்டிங்களோ 

அது என்ன எல்லோரும் ஒரே மாதிரி போரிங்க என்று கேட்டு உள்ளார் 
இதில் ஆத்திரம் அடைந்த மதுக்கூர் மைதின் கூட்டணிக்கு போவதும் , ஆதரவு கொடுப்பது எங்கள் ஜனநாயக உரிமை என்று வாக்கு வாதத்தில் இடுபட்டு உள்ளார் 

இதில் வாக்கு வாதம் அருகில் இருந்த காவல்துறையிடம் தள்ளு முள்ளு வரை சென்று உள்ளது 
இதில் ஆத்திரம் அடைந்த Asp எவன் உன்னை பார்க்க வருகிறான் பார்ப்போம் என்று கூறி , கையில் இருந்த தொலைபேசி வாங்கி switch off செய்து விட்டு இரவு 9:30 மனி வரை Asp அலுவலகத்தில் வைத்து உள்ளனர் 
அதன் பிறகு போலியாக வழக்கு பதிவு செய்து (போலி வழக்கு 506{॥} மற்றும் 386 பதிவு செய்து remand செய்து இருந்தது காவல் துறை…. 
அத்துடன் தீறவில்லை எ ஏஸ் பி யின் வெறி மல்லிபட்டிணத்தில் தாக்கபட்ட ஏகேடி என்கிற ஏகே தாஜ்தீன் வழக்கில்

 [குறிப்பு அவர் தாக்கபட்டதும் முதலில் முகநூலில் கண்டனத்தை பதிவு செய்தது நான் சத்திரம் காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்ய வழியுறுத்தினேன்….. அது மட்டும் இன்றி காவல்துறை கண்டித்து மல்லிபட்டிணத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு மைதீன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்தார்] வேண்டும் என்றே மதுக்கூர் மைதீன் மீது 307 வழக்கு போட்டு பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றினார்கள் அப்பொழுதாவது அவர்களின் வெறி அடங்கியதா இல்லை மைதீன் மீது குண்டாஸ் போடுவதற்க்கான முழு வேலையில் 50% முடிந்து விட்டது காவல் வெறியர்களின் கூட்டம்….. 
மதுக்கூர் மைதினை எப்படியும் சட்டப்படி மீட்டு கொண்டு வந்தே தீருவோம்…….
பொய் வழக்கு போட்ட Asp சும்மா விடுவதாக எண்ணம் இல்லை அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்போம்……

 

இச் சமுதாயத்தின் எதிரியான காவல்துறையும் , உளவு துறையும் இச் சமூகத்திற்காக போராடும் ஒருவர் மீது போலி வழக்கு போடுகிறான் என்றால் இதுவே நாம் நமது இலக்கை நோக்கி சரியாக செல்கிறோம் என்ற அத்தாட்சி…. 
அல்லாஹ் உதவி செய்வான் 
சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்…..
அதுமட்டும் அல்லாது இன்ஷா அல்லாஹ் வரும் 11/04/2016 தி்ங்கள் அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் எமது தலைமையில் நடைபெற உள்ளது அதில் அதிரை,மதுக்கூர்,பட்டுக்கோட்டை,சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனார்.

இ.ஜெகபர் சாதிக்(அதிரை ராஜா)

தஞ்சை மாவட்ட தலைவர்

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி

Close