மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் 2 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

ம.ம.க வில் இருந்து பிரிந்து வந்த பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் பொருளாலர் ஹாரூன் மற்றும் பலரால் சில மாதங்களுக்கு முன்னர் மனிதநேய ஜனநாயக கட்சி என்னும் பெயரில் புதிய கட்சி துவங்கப்பட்டது. இந்த கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டனிக்கு ஆதரவு தெரிவித்தது  

இதனை அடுத்து அக்கட்சிக்கு நாகை மற்றும் ஒட்டஞ்சத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு தொகுதிகள் போட்டியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதில் நாகை தொகுதியில் உள்ளூர்காரரான பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்களும் ஒட்டஞ்சத்திரம் தொகுதியில் பொருளாளர் ஹாரூன் அவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

 

Close