மனிதநேய மக்கள் கட்சியுடன் நேரடியாக மோதும் மனிதநேய ஜனநாயக கட்சி! சூடு பிடிக்கும் நாகை தொகுதி!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி போட்டியிடவுள்ள ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ராமநாதபுரம், நாகை, ஆம்பூர், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மனிதநேய மக்கள் கட்சியும் அக் கட்சியிலிருந்து பிரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியும் நாகப்பட்டினம் தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. 
மனித நேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்த தமிமுன் அன்சாரி மனித நேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அத் தொகுதியின் வேட்பாளர்கள் யார் என்பதை தமிமுன் அன்சாரி அறிவித்தார். 

நாகப்பட்டினம் தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாகவும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் கட்சியின் பொருளாளர் ஹாருண் போட்டியிட உள்ளதாகவும் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். 

Close