இணைகின்றது சவூதியும் எகிப்தும்!

சவூதி அரேபியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மத்தியில் செங்கடல் கடந்து செல்கின்றது. எனவே இதன் மீது இவ்விரு நாடுகளையும் சாலை மார்க்கமாக இணைப்பதற்க்காக இந்த பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பாலம் இவ்விரு நாடுகளை மட்டும் இணைக்கும் பாலம் அல்ல, மாறாக ஆசியா, ஆப்பிரிக்கா என இரண்டு ராட்சத கண்டங்களையும் சாலை மார்க்கமாக இணைக்கின்றது. சவூதியின் தெற்கு பகுதியில் உள்ள ராஸ் ஷேக் ஹுமைத் இருந்து துவங்கிய பாலம் நடுக்கடலில் உள்ள ஜஜீரட் டிரான் என்னும் தீவு வரை செல்லும். அதன் தொடர்சியாக எகிப்து நாட்டின் வடக்கு பகுதியான ராஸ் நஸ்ரானி வரை கட்டப்படவுள்ளது.

 இதன் மூலமாக கடல் மற்றும் வான்வெளி மூலமாக நடைபெற்று ஏற்றுமதி, இறக்குமதிகள் சாலை மார்க்கமாகவும் நடைபெறும். இதன் மூலம் சவூதி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு தொழில் வளம் அதிகரிக்கும். மேலும் அரேபிய நாடுகளில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்காண சுற்றுல்லா பயணிகள், வியாபரிகளும் சவூதிக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் ஹஜ் உம்ரா பயணிகளும் இதன் மூலம் பெரிதும் பயணடைவார்கள்.

எகிப்து தலைநகர் கைரோ சென்ற சவூதி மன்னர் சல்மான் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி யுன் இது குறித்து பேசுவார்த்தை நடத்தியதுடன் இந்த பாலம் கட்டும் பணிக்காக 17 முதலீட்டு பத்திரங்கள் கையெழுத்தாகின. இந்த பாலத்திற்கு கிங் சல்மான் பின் அப்துல் அஜீஸ் பாலம் என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் என கூறப்படுகின்றது.

தொகுப்பு: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

தகவல்: கலீஜ் டைம்ஸ்

Close