துவங்கியது AFCC யின் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி!

அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று கரிசல்மணி மைதானத்தில் துவங்கியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தொடர் மாவட்ட அளவில் விளையாடும் பல அணிகள் இந்த தொடரில் வெற்றி பெறுவதை கௌரவமாக கருதுகின்றனர். அதிரை AFCC அணியினர் இதனை சிறப்பாக நடத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான APL தொடர் போட்டி இன்று காலை துவங்கியது. இதில் திருச்சி, தஞ்சை போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் பல தலை சிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாடுகின்றன. இன்றைய தினம் துவக்க நாள் ஆட்டமாக திருச்சி அணியை எதிர்த்து அதிரை AFCC அணி களமிறங்கி விளையாடி வருகின்றது. போட்டி முடிவுகள் விரைவில் பதியப்படும்.

IMG_5548 IMG_5549 IMG_5545 IMG_5546 IMG_5547
image

image

image

image

Close