Adirai pirai
இந்தியா

கேரளாவில் பரிதாபம்! கோவில் திருவிழா வெடி விபத்தில் 84 பேர் மரணம்!

கேரளாவில் கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 84 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கேரளா மாநிலம் கொல்லம் அருகேஉள்ள பராவூர் கோவிலில் ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். திருவிழாவில் நேற்று இரவு பட்டாசு வெடிக்கப்பட்டு உள்ளது. பட்டாசு வெடிக்கப்பட்டதை வேடிக்கை பார்க்க சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்து உள்ளனர். அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறியானது இன்று மாலை வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுக்கள் மீது விழுந்து உள்ளது.
இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் கடும் சத்ததுடன் வெடித்து சிதறிஉள்ளது. இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. கட்டிடங்களின் சுவரும் இடிந்து விழுந்து உள்ளது என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் 84 பேர் உயிரிழந்து உள்ளனர்.
8db67583b53fc1c766cc8909c32297f9cb42d951-tc-img-preview
200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலையானது கவலைக்கிடமாக உள்ளது. கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் காயம் அடைந்து உள்ளனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு  கேரள மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி விரைந்துள்ளார். தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்
இரவு 12 மணி வரையிலேயே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கொடுக்கப்பட்ட அனுமதியை மீறி அதிகாலை 3 மணிக்கும் மேலும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவை விட அதிகமான பட்டாசுக்கள் வெடிக்கப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. இச்சம்பவமானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy