கேரளா கோவில் வெடி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் 1 லட்சம் ரூபாய் வழங்கும் யூசுப் அலி

மதம் கடந்த மனிதநேயம்…
கேரளாவில் ஒரு ஹிந்து கோவிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 106 பேர் பலியானதோடு, 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கேரளாவைச சேர்ந்த லூலூ குழுமத்தின் அதிபர் MA. YUSUFALI தனது வருதத்தை பகிர்ந்து கொண்டதோடு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிட்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.. 

மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்… 

மதம் பார்க்காமல் மனித நேயம் சார்ந்து உதவும் யூசுபலியின் செயல் நெகிழ வைக்கிறது… 

  Colachel Azheem

Close