வெயில் காலத்தில் தினமும் புதினா நீரை குடிப்பதன் நன்மைகள் !

dr.pirai_வெயில் காலத்தில் தினமும் புதினா நீரை குடிப்பதன் நன்மைகள் குறித்து தெரியுமா?

வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பலரும் தங்களது உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருவார்கள். அதிலும் வெயிலில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் கோடையில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

முக்கியமாக வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலின் ஆற்றல் அனைத்தும் மிகவும் வேகமாக குறையும். எனவே உடலின் ஆற்றலைத் தக்க வைக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும், உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் ஓர் அற்புத பானம் உள்ளது. அதனை தினமும் பருகி வந்தால், கோடையில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அது வேறொன்றும் இல்லை புதினா தண்ணீர். இந்த புதினா தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலம் நீங்கள் நினைத்திராத அளவில் நன்மைகளைப் பெறலாம். சரி, இப்போது புதினா தண்ணீரை எப்படி தயாரிப்பது என்றும் அதனை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் பார்ப்போம்.

செரிமானத்திற்கு உதவும்:கோடையில் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதனை புதினா தண்ணீர் சரிசெய்யும். ஏனெனில் புதினா நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. இவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும்.

குமட்டல் குணமாகும்:கோடையில் புதினா நீரைக் குடிப்பதால், அதில் உள்ள அடர்ந்த நறுமணத்தால் குமட்டல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் காலை சந்திக்கும் சோர்வை இந்த புதினா நீர் தடுக்கும்.

முகப்பரு:கோடையில் முகப்பரு தொல்லையால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மேலும் வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். ஆனால் இதனை புதினா நீர் குடிப்பதன் மூலம் சரிசெய்யலாம். மேலும் இந்த நீரைக் குடிப்பதால், சரும பொலிவும் மேம்படும்.

ஆஸ்துமா:புதினா சளியை முறிக்கக்கூடிய ஓர் மிகவும் சிறந்த பொருள். இந்த நறுமணமிக்க மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நீரைப் பருகும் போது, சுவாசப் பாதைகள் சுத்தமாகி, சுவாசிப்பதில் உள்ள பிரச்சனைகள் அகலும். முக்கியமாக இந்த பானம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மாதவிடாய் பிரச்சனைகள்:கோடை என்றாலே எரிச்சல் வரும். அதிலும் இக்காலத்தில் மாதவிடாய் பிரச்சனைகளான அடிவயிற்று வலி, பிடிப்புகள் போன்றவற்றை சந்தித்தால், அதை விடக் கொடுமை வேறு எதுவும் இல்லை. ஆனால் இதனை புதினா நீர் நல்ல தீர்வு தரும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்:கோடையில் தான் அனைத்து கொடிய நோய்களும் வரும். ஏனெனில் வெயில் கொளுத்தும் போது நாம் தொருவோரங்களில் விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை அதிகம் வாங்கி பருகுவோம். தாகம் எடுக்கும் போது ஜூஸை எந்த நீரில் தயாரித்திருப்பார்கள் என்று எல்லாம் யோசிக்க முடியாது. இதன் காரணமாகவே பல நோய்கள் உடலை தாக்குகின்றன. ஆனால் வீட்டில் தயாரித்த புதினா நீரைக் குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பு படலமாக இருக்கும்.

மன அழுத்தம்:புதினா நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகளில் ஒன்று, இதில் உள்ள உட்பொருள் மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

எடை குறையும்:கோடையில் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், இக்காலத்தில் முயற்சி செய்யுங்கள். இதனால் விரைவில் நல்ல பலனைப் பெறலாம். அதிலும் எடையைக் குறைக்க நினைப்போர் புதினா நீரைப் பருகுவதால், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, கொழுப்புக்கள் ஆற்றலாக மாற்றப்படும். இதன் காரணமாக உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.

வாய் பராமரிப்பு:புதினாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயதிர்ப்பு அழற்சி பொருள், ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் புதினா நீர் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

தூசியால் வரும் சளிக்காய்ச்சல்:கோடைக்கால அழற்சியால் நீங்கள் அவஸ்தைப்படுபவராயின், அதனை புதினா நீர் சரிசெய்யும். எப்படியெனில் புதினா ஹிஸ்டமைன் வெளியேற்றத்தைத் தடுத்து, அழற்சி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும்.

புதினா தண்ணீர் செய்முறை:ஒரு பெரிய ஜாடியில் நீரை நிரப்பி, அதில் சிறிது புதினா இலைகள், எலுமிச்சை துண்டுகள், வெள்ளரிக்காய், சிறிது தட்டிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, வேண்டிய நேரத்தில் பருகலாம்.

Close