அதிரையில் உப்பு சார்ந்த காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும்! திமுக தேர்தல் அறிக்கை!

திமுக தேர்தல் அறிக்கை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளவற்றை அறிவித்துள்ளனர். இதில் நமதூர் அதிரையை பொருத்தவரை உப்பு சார்ந்த காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல், மனோராவை சுற்றுலா தளமாக மாற்றுதல், பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிற ஊர்களுக்கு இரண்டு மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அதிரைக்கு ஒரே ஒரு திட்டம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

   
 img_5647

Close