Adirai pirai
articles posts உள்ளூர் செய்திகள்

அதிரை கணவன்மார்களுக்கு ஒரு எச்சரிக்கை! அவசியம் படிக்கவும்!

இந்த நவீன யுகத்தில் எல்லாம் எளிமையாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு பொருள் வாங்குவதென்றால் ஒரு மஞ்சள் பையையும் வீட்டில் பெண்கள் எழுதிக்கொடுத்த சிட்டையையும் தூக்கிக்கொண்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்து வீட்டு பெண்களிடம் சிறுவர்கள் இளைஞர்கள் கொடுப்பார்கள். இன்று வீட்டு பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போனும், டேப்லட்டும் வாங்கி கொடுத்து அவர்களை நகராதவர்களாக்கி விட்டோம்.

இதனை சரியாக தொழில் நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்ட கடைக்காரர்கள் ஹோம் டெலிவரி என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இதன் மூலம் ஒரே காலில் நமது வீட்டுக்கு அனைத்து பொருட்களும் வந்து சேரும். இந்த ஹோம் டெலிவரி முறை நமக்கு வீட்டில் உள்ளவர்கள் சுலபமானதாக இருந்தாலும், இதன் மூலம் நம் வீட்டு பெண்களின் தொலைபேசி எண்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் சென்றடைகின்றது. இதன் காரணமாக அவர்களின் எண்கள் தவறானவற்றுக்கு பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் ஹோம் டெலிவரி செய்ய வரும் ஆண்களிடம் திருமணம் முடிந்த பெண்கள், குமரிப்பெண்கள் சகஜமாக பேசுவதும் அது பின் நாட்களில் தவறான தொடர்பாக மாறுவதும் நமதூரிலும் அறங்கேறி வருகின்றது என்பது வேதனைக்குறிய செய்தியாகும். முடிந்த வரை இது போன்று ஹோம் டெலிவரி செய்யவரும் ஆண்களிடம் பணிவாக மெல்லிய குரலில் பேசாமல் நபி வழிகாட்டி வாறு கணத்த அதட்டிய குரலில் பேசினால் அவர்களுக்கு உங்கள் மீது தவறான எண்ணம் வருவதை தவிர்க்க முடியும்.  

இது ஹோம் டெலிவரி என்பதுக்கு மட்டும் பொருந்தாது, வீட்டுக்கு வரும் பால்காரர்கள், எலெக்ட்றிசியன்கள், ப்ளம்பர்கள் போன்ற இவர்களில் நல்லவர்கள் இருந்தாலும் இது போன்றவர்களில் கருப்பு ஆடுகளும் இருக்கவே செய்கின்றார்கள். இது போன்றவர்கள் நமது பெண்களுக்கு வலை விரிக்கின்றனர். இந்த தீ வழியில் நமது பெண்கள் பலர் விழுந்து வருகின்றனர்.

அடுத்ததாக நமதூர் பெண்கள் வெளியில் சில தூரம் செல்வதாக இருந்தாலும், மருத்துவமனை, வெளியூர் போன்றவற்றுக்கு செல்வதாக இருந்தாலும் முதலில் அழைப்பது ஆட்டொவை தான். முன்பு ஆட்டோவை அழைக்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ள ஆண்களையோ அல்லது சிறுவர்களையோ ஏவி ஆட்டோவை அழைத்து வர சொல்வோம். அவர்களும் நல்ல தெரிந்த ஆட்டோவாக பிடித்து வீட்டுக்கு அனுப்புவார்கள். ஆனால் இந்த செல்போன் வந்ததில் இருந்து ஒரு போன், ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நிற்கும். 

காலப்போக்கில் அந்த ஆட்டோ ஹோம் ட்ரைவர் ஆகிவிடுவார். வெளியில் பயணம் செல்வது, வீட்டு பொருட்களை வாங்கி கொண்டு வருவது, அரசு சார்ந்த பணிகளை செய்வது போன்ற சகல வேலைகளையும் செய்து தருகிறார். இது அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் பெண்களுக்கு நேருக்கத்தை ஏற்படுத்தி தவறான தொடர்புகளுக்கு வழிவகை செய்கின்றது. 

எனவே பெண்கள் மார்க்க சொல்லிதந்தவாறு அந்நிய ஆண்களை வீட்டில் மஹரமான ஆண் இல்லாதவரை அனுமதிக்காதீர்கள். அந்நிய ஆண்களுடன் மெல்லிய குரலில் பேசாமல் அதட்டியவாறு கணத்த குரலில் பேசுங்கள். இது போன்ற ஆண்கள் அவர்கள் தம் வேலையை தவிர்த்து வேறு ஏதாவது பேச முற்பட்டால் உடனே முகத்தில் அறைந்தார்போல் அது உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று சொல்லி விடுங்கள். இதன் மூலம் அவர்கள் உங்களிடம் தேவையற்ற பேச்சுக்களை பேசமாட்டார்கள். 

மேலும் உங்கள் எண்களை அந்நிய ஆண்களிடம் வழங்காமல் வீட்டு ஆண்களின் எண்களை வழங்குவதாலும், அவர்களின் செல்பேசிகளில் தொடர்புகொண்டு பேசுவதாலும் உங்கள் எண்கள் அந்நிய ஆண்களுக்கு தெரிவதை தவிர்கலாம். 

வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டு பெண்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் போன்றவற்றை வீட்டு சிறுவர்கள் மூலமாகவோ அல்லது தாமாகவோ வாங்கி கொடுப்பது, பிற வெளி வேலைகளுக்கு அவர்களை வெளியில் அனுப்பாமல் அந்த வேலைகளையும் நாம் செய்து கொடுப்பதால் வீட்டு பெண்களிடம் அந்நிய ஆண்களின் அறிமுகம் இல்லாமல் போகும். 

இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நம் வீட்டு பெண்களை மேற்கண்ட கேவலமான விசயங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இந்த கட்டுரை வெறும் பதிவாக மட்டும் கருதாமல் நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் கடைபிடிக்கவேண்டியவையாக கருத வேண்டும். 

குறிப்பு: இந்த ஆக்கம் பல நாட்களாக சிந்தித்து நமது அதிரை பிறையின் மூலம் மக்களுக்கு விழிப்புணைர்வை கொண்டு வரவேண்டும் என்ற நல்ல நோக்கில் பதிவு செய்யப்பட்டவையாகும். இது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்க்காக அல்ல. பல நல்லவர்கள் சேவை மனப்பாண்மையுடன் இதனை செய்கின்றனர். அவர்களை இந்த கட்டுரை எந்த தாக்குவதற்க்காக அல்ல. 

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி